உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறக்கட்டளை மோசடி மலைவாழ் மக்களிடம் கூட்டம் நடத்தி ஏமாற்றியது அம்பலம்

அறக்கட்டளை மோசடி மலைவாழ் மக்களிடம் கூட்டம் நடத்தி ஏமாற்றியது அம்பலம்

சேலம்: சேலம், அம்மாப்பேட்டையில், அன்னை தெரசா அறக்கட்-டளை நடத்தி, கவர்ச்சி விளம்பரங்களை செய்து பணம் முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டது. இதில், 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்கள், நில ஆவணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அறக்கட்டளை தலைவி விஜயபானு உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்-தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் பெருளாதார குற்றப்-பிரிவு போலீசாருக்கு, தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்-றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்களில் சிறப்பு கூட்டம் நடத்தி, அந்த மக்களிடம் ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது தெரிய-வந்துள்ளது. குறிப்பாக விஜயபானு உள்ளிட்ட நிர்வாகிகள், ஏற்-காடு, கொல்லிமலை மலைவாழ் மக்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.முன்னதாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி நன்கு பழகியுள்ளனர். தொடர்ந்து, 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 3 மடங்காக திருப்பி தருவோம்' என கூறியுள்-ளனர். அதை நம்பிய மலைவாழ் மக்கள், அறக்கட்டளையில் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஏற்காடு, கொல்லி-மலை, ராசிபுரத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது மலைவாழ் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை