கிணற்று சுவரில் அமர்ந்து பேசிய முதியவர் தவறி விழுந்து பலி
கெங்கவல்லி, தலைவாசல் அருகே பெரிய புனல்வாசலை சேர்ந்தவர் கண்ணுசாமி, 65. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். 10:30 மணிக்கு, அவர் கிணற்றில் பின்புறமாக தவறி விழுந்தார். 10 நிமிடத்தில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. 11:00 மணிக்கு அங்கு வந்த வீரர்கள், 100 அடி ஆழத்தில், 80 அடிக்கு தண்ணீர் உள்ள கிணற்றில் இறங்கி தேடினர். ஒன்றரை மணி நேரத்துக்கு பின், கண்ணுசாமியை சடலமாக மீட்டனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.