அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தர்ணா
சேலம்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில், மாவட்ட அளவில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. தலைவர் வசந்தகுமாரி தலைமை வகித்தார்.அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்புதல்; 1,993 மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். இல்லை எனில் சமூக நலத்துறையில் உள்ள காலியிடத்துக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். அறிவித்தபடி மே மாத விடுமுறையை, ஒரு மாதம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன், அங்கன்வாடி சங்க மாநில துணைத்தலைவர் சரோஜா, மாவட்ட செயலர் மனோன்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.