உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்னப்பாவாடை உற்சவம்

அன்னப்பாவாடை உற்சவம்

சேலம்: சுந்தரராஜ பெருமாள் பக்த சபா சார்பில், சேலம், கோட்டை அழ-கிரிநாதர் கோவிலில், மூலவர் சுந்தரவல்லி தாயார், அழகிரிநாதருக்கு 28ம் ஆண்டாக சந்தனகாப்பு உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் நந்தவனத்தில் சுந்தரவல்லி, ஸ்ரீதேவி, பூதேவியர் புடைசூழ நந்தனவனத்தில் சுவாமி எழுந்தரு-ளினார். அங்கு பட்டாச்சாரியார்களால் விசேஷ திருமஞ்சனம் நடத்தி பெருமாளை குளிர்வித்தனர். மதியம், கருவறை முன் அதிகார மண்டபத்தில் கூடை கூடையாக அன்னத்தை கொட்டி சிறப்பு அலங்காரம் செய்து, 'திருப்பாவாடை' எனும் அன்னப்பாவாடை உற்சவம், பிரபந்த கோஷ்டியார்களின் திவ்ய பிரபந்த பாராயணத்-துடன், சந்தன காப்பு உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை