சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்புசேலம், செப். 29-சேலம் வழியே கொச்சுவேலியில் இருந்து பெங்களூருக்கு வார சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொச்சுவேலி - பெங்களூரு ரயில், அக்., 1 முதல், நவ., 5 வரை, செவ்வாய் மாலை, 6:05க்கு புறப்பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே மறுநாள் காலை, 10:55க்கு பெங்களூருவை அடையும். ஈரோட்டுக்கு அதிகாலை, 4:10க்கும், சேலத்துக்கு, 5:07க்கும் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், அக்., 2 முதல் நவ., 6 வரை புதன் மதியம், 12:45க்கு கிளம்பி அடுத்தநாள் காலை, 6:45க்கு கொச்சுவேலியை அடையும். சேலத்துக்கு மாலை, 4:57க்கும், ஈரோடுக்கு, 5:50க்கும் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.