உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,008 லிட்டர் பாலால் தண்டாயுதபாணிக்கு அபிேஷகம்

1,008 லிட்டர் பாலால் தண்டாயுதபாணிக்கு அபிேஷகம்

சேலம், சேலம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி மலைக்கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அடிவாரத்தில் பாலாலயம் செய்யப்பட்ட தண்டாயுதபாணி, உற்சவமூர்த்திகளுக்கு விசேஷங்கள் நடத்தப்படுகின்றன. ஆடி கிருத்திகையான நேற்று, குமரகிரி ஆடி கிருத்திகை பால் அபி ேஷக கமிட்டி சார்பில், 52ம் ஆண்டாக நேற்று விழா நடந்தது. முன்னதாக அடிவாரம் அரசமர விநாயகர் கோவிலில் திரண்ட பக்தர்கள், 'கந்தனுக்கு அரோகரா; முருகனுக்கு அரோகரா' கோஷம் முழங்க, பால் குடங்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். 11:00 மணிக்கு உற்சவர் தண்டாயுதபாணிக்கு, 1,008 லிட்டர் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. திரண்டிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர் களுக்கு அபிேஷக பால், பிரசாதமாக வழங்கப்பட்டது.மதியம், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து உற்சவர்களுக்கும், சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது. பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவீதி உலாதாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். மதியம் சந்தனக்காப்பு மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் பூக்கள் அங்காரத்தில், கோவிலில் இருந்து திருவீதி உலா தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியே சென்று, மீண்டும் கோவிலில் நிறைவு செய்தனர்.1,008 தீப விளக்குமகுடஞ்சாவடி சுப்ரமணியர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 1,008 கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது. வெள்ளி கவசம்ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு, 16 வகை அபிேஷக பூஜை நடந்தது. மூலவர் வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அதேபோல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், பால், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தம்மம்பட்டி பாலதண்டாயுதபாணி, ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவிலில் உள்ள பாலமுருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி