உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காருக்கு தீ வைப்பு மேலும் ஒருவர் கைது

காருக்கு தீ வைப்பு மேலும் ஒருவர் கைது

சேலம்: சேலம், ராமகிருஷ்ணா சாலையை சேர்ந்தவர் சரவணகுமார், 40. இவர் கடந்த, 9ல், 'ஹோண்டா சிட்டி' காரில் வீடு அருகே வந்த போது, பைக்கில் வந்த, 2 பேர் மோதினர். சரவணகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து அவரது காருக்கு தீ வைக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் பார்த்து அணைத்தனர். சரவணகுமார் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்ததில், பைக்கில் வந்து விபத்து ஏற்படுத்தியவர்கள் தீ வைத்தது தெரிந்தது. அதன்படி கன்னங்குறிச்சி மவுலிதரன், 24, மோகன்ராஜ், 24, ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முள்ளுவாடி கேட் மக்கான் தெருவை சேர்ந்த ஆதிஅர்ஜூனன், 23, என்பவரை, கன்னங்குறிச்சியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ