உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பரோட்டா மாஸ்டரை தாக்கிய மேலும் ஒருவருக்கு காப்பு

பரோட்டா மாஸ்டரை தாக்கிய மேலும் ஒருவருக்கு காப்பு

சேலம், சேலம், லைன்மேடு, புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டி, 38. அன்னதானப்பட்டி, சண்முகா நகரில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். அங்கு கடந்த, 6 இரவு, 4 பேர் வந்து, சாப்பிட்ட பின் பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். பாண்டி தட்டிக்கேட்க, அவர்கள் விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் நேற்று, தாதகாப்பட்டி, வேலு புதுத்தெருவை சேர்ந்த அப்பு, 19, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை