மேலும் செய்திகள்
சிலம்ப போட்டி: அரசு பள்ளி சாதனை
27-Sep-2024
பேச்சுப்போட்டியில் முதலிடம்பள்ளி மாணவருக்கு பாராட்டுசங்ககிரி, அக். 25-காந்தி பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. அதில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 7ம் வகுப்பு மாணவர் பிரகதீஸ்வரன், முதலிடம் பிடித்தார். அவருக்கு, 5,000 ரூபாய், பாராட்டுச்சான்றிதழை, கல்லுாரி முதல்வர் காந்திமதி வழங்கினார். பின் அந்த மாணவரை, சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண் குழு நிர்வாகிகள் பாராட்டினர்.
27-Sep-2024