குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் விடுபட்டவருக்கு வழங்க ஏற்பாடு
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும், 1 முதல், 19 வயதுக்-குட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அங்கன்வாடி குழந்தைகள், பெண்கள் என, 2.75 லட்சம் பேருக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி கடந்த, 10ல் தொடங்கியது. இதில் விடுபட்டவர்களுக்கு வழங்கும் முகாம், நாளை வரை நடக்கிறது. மாநகராட்சியில், 314 அங்கன்வாடி மையங்கள், 16 நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம், மாத்திரைகள் வழங்-கப்படுகின்றன. இப்பணியில் மருத்துவர், செவிலியர், மருந்தா-ளுனர், அங்கன்வாடி பணியாளர் உள்பட, 500க்கும் மேற்-பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.