உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா

ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழா

ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழாராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கலைத்திருவிழாதலைவாசல், டிச. 29-தலைவாசல், வீரகனுார் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, கல்வி மற்றும் கலைத்திருவிழா நடந்தது. பள்ளி தலைவர் அருள்குமார் தலைமை வகித்து, ''மாணவர்கள் தனித்திறமை, கலைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக இந்த விழா அமையும். அதனால் படிப்பிலும், கல்வி சார்ந்த இணை செயல்பாடுகளிலும் தலைசிறந்த மாணவர் களாக திகழ வேண்டும்,'' என்றார்.செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்து, ''ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, பல்வேறு கலைகளை கற்று முன்மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும்,'' என்றார்.பொருளாளர் பிரபா, ''போட்டி நிறைந்த உலகில், பல சிந்தனைகளை வளர்த்து, தெளிவாக பாடங்களை படித்து, எதிர்காலத்தில் சிறந்த சாதனையாளராக வளர வேண்டும்,'' என்றார்.கல்வி குழு ஆலோசகர்கள் லட்சுமி நாராயணன், இளையப்பன், கூட்ரோடு பழனிவேல், கல்வி குழு இயக்குனர் ராஜா, தங்கவேல், ராஜேஸ்வரி, பள்ளி இயக்குனர்கள், மாணவர்களின் கலைத்திறன், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களை பாராட்டினர். டாக்டர் மரியா ஜெகன், மாணவர்களுக்கு பொன்னாடைகள் அணிவித்து ஊக்கப்படுத்தினார். இதில், 3,500க்கும் மேற்பட்ட பெற்றோர், பள்ளி நிர்வாகத்தையும், ஆசிரியர்களையும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ