உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் குகையில் கலையரங்கம் திறப்பு

சேலம் குகையில் கலையரங்கம் திறப்பு

சேலம், சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் எதிர் எதிரே அமைந்துள்ளது. இங்கு ஆடி திருவிழாவையொட்டி நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. மாரியம்மன் கோவில் திடலில் நிரந்தர கலையரங்கம் கட்ட வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதையேற்று சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணியம், தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, 24.45 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டி, அதை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.அ.தி.மு.க., அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலர்கள் சிவக்குமார், சரவணமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை