உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேட்டது பதவி உயர்வு; கிடைத்தது சஸ்பெண்ட் மீன் வளத்துறை மேற்பார்வையாளர் அதிர்ச்சி

கேட்டது பதவி உயர்வு; கிடைத்தது சஸ்பெண்ட் மீன் வளத்துறை மேற்பார்வையாளர் அதிர்ச்சி

கேட்டது பதவி உயர்வு; கிடைத்தது 'சஸ்பெண்ட்'மீன் வளத்துறை மேற்பார்வையாளர் அதிர்ச்சிசேலம், நவ. 15-மீன்வளத்துறை மேற்பார்வையாளர், பதவி உயர்வு வழங்காதது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட் டம் தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 46. இவர், 2012 -செப்., 27ல் மீன்வளத்துறையில் பணிக்கு சேர்ந்தார். 5 ஆண்டுகளாக சேலம் மாவட்டம் ஏற்காடு மீன்வளத்துறை அலுவலகத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். அவருக்கு அனுபவ அடிப்படை யில், கடந்த மாதம் சார் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டிய நிலையில், வழங்காதது குறித்து, சென்னை மீன்வளத்துறை இயக்குனர் கஜலெட்சுமி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடந்த, 11ல் கடிதம் அனுப்பியிருந்தார்.மறுநாள் இரவு, சென்னை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. அதில் விதிமீறி செயல்பட்டதாக கூறி, கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை, இயக்குனர் கஜலெட்சுமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து கணேசனுக்கு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அமைச்சர் தலையிடுவாரா?இதுகுறித்து கணேசன் கூறுகையில், ''கடந்த அக்டோபரில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் துறை இயக்குனர், முதல்வரின் தனி பிரிவுக்கு கடிதம் எழுதினேன். இதற்கு, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய ஒரே காரணத்திற்கு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு கேட்பது என் உரிமை. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை