உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த உதவி இயக்குனர் விளக்கம்

நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த உதவி இயக்குனர் விளக்கம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 300 ஹெக்டேரில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழையால், நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் கூறியதாவது: பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதை பெற்று விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். நிலக்கடலையில் ஒரு வகை பூஞ்சை தாக்குவதால், வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. இதனால், 60 முதல், 100 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும்.மண், செடி, சருகுகளில் பூஞ்சையின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும். அது, பாசன நீர், கால்நடைகள், மனிதர்கள் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். மண் மீது உள்ள பயிர் கழிவை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் என்ற பூஞ்சைக்கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஹெக்டேருக்கு டிரைக்கோ டெர்மாவிரிடி, 2 முதல், 5 கிலோ அளவில், 30 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். ஹெக்டேருக்கு ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு, அரை கிலோ பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில், ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை, செடியின் வேர் பகுதி நனையும்படி ஊற்றி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை