உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிகள் மீது தாக்குதல்? சிறையில் நீதிபதி விசாரணை

கைதிகள் மீது தாக்குதல்? சிறையில் நீதிபதி விசாரணை

சேலம்: தேனி சிறையில் இருந்து சமீபத்தில், 17 கைதிகள் தப்பினர். பின் அவர்களை போலீசார் கைது செய்து, வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். அவர்களை தாக்கியதாக, 4 பேரின் பெற்றோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதுதொடர்பாக விசாரிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் மீனாட்சிசுந்தரம், முத்து, சபரிநாத், சோலை முகிலீஸ்வரன், நிஷாந்த், தருண்குமார் ஆகியோரிடம், நேற்று காலை, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன், சட்டப்பணி ஆணைக்குழு செயலர், 3 மருத்துவர் அடங்கிய குழுவினர் விசாரித்தனர். அப்போது கைதிகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !