பெருமாள் கோவிலை கையகப்படுத்த முயற்சி?
சேலம்:இடைப்பாடி, கே.வடுகம்பட்டி அழகம்பாளையத்தை சேர்ந்த கந்-தசாமி உள்பட சிலர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:அழகம்பாளையம் அருகே உள்ள பஞ்சுமாதா, ஸ்ரீபெருமாள் கோவில், 5,000 குடும்பத்தினருக்கு குலதெய்வமாக உள்ளது. கந்-தசாமி குடும்பத்தினர் பூஜை செய்து நிர்வாகம் செய்து வருகின்-றனர்.உறவினர்கள் சிலர், கோவில் நிர்வாகத்தை கையகப்படுத்தி, நகைகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுதொடர்பாக இடைப்பாடி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. போலீசார், அவர்களுக்கு சாதமாக செயல்படுகின்றனர். மேலும் நிர்வாகத்தை ஒப்படைக்கக்கோரி மிரட்டல் விடுக்கின்றனர். முறையாக கோவிலில் பூஜை செய்ய முடியவில்லை. விசாரித்து கோவிலை மீட்டு தர வேண்டும்.