உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாட்டூ கடையில் திருட முயற்சி

டாட்டூ கடையில் திருட முயற்சி

சேலம், சேலம் சீலநாயக்கன்பட்டி திடீர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ், 27. இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் டாட்டூ கடை வைத்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு, கடையை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் கடைக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பொருட்கள் எதுவும் திருடு போகாமல் இருந்தன. இது குறித்து நேற்று முன்தினம், ஜெகதீஸ் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ