உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்டோ எரிந்து நாசம்

ஆட்டோ எரிந்து நாசம்

சேலம்: சேலம், நெத்திமேடு, கே.பி.கரடை சேர்ந்தவர் சசிகுமார், 40. ஆட்டோ ஓட்டி தொழில் செய்கிறார். இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, வீடு முன் ஆட்-டோவை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்தபோது, அவரது ஆட்டோ தீப்பற்றி எரிந்து கொண்-டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், தண்ணீர் ஊற்றி அணைத்தார். இருப்பினும் ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகு-றித்து சசிகுமார், நேற்று அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ