குழந்தையிடம் சீண்டல் ஆட்டோ டிரைவர் கைது
சேலம்: சேலம், எருமாபாளையம், செல்லக்குட்டிக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ், 45. சரக்கு ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் புகார்படி, டவுன் மகளிர் போலீசார், நேற்று, 'போக்சோ' சட்டத்தில் தங்கராஜை கைது செய்தனர்.