ஆட்டோ பர்மிட் வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆத்துார்:மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்; அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில்; ஆட்டோ மற்றும் கார் டிரைவர் சங்கம்; சாலையோர வியாபாரிகள் வாழ்வுரிமை சங்கம் சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்ஆர்ப்பாட்டம் நடந்தது. லெனினிஸ்ட் ஆத்துார் கோட்ட செயலர் சின்னயன் தலைமை வகித்தார். அதில், பல ஆண்டாக நிலுவை வைத்துள்ள ஆட்டோ பர்மிட்டுகளை உடனே வழங்குதல்; அரசு மருத்துவமனை முன் மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வாகனம் நிறுத்த இடவசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.