உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

மருத்துவமனை சுவரில் விழிப்புணர்வு ஓவியம்

சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சுற்றுச்சுவரில் நேற்று ஓவியங்கள் தீட்டப்பட்டன.'ேஹப்பி வால்ஸ்' திட்டத்தில் தனியார் கல்லுாரி, மார்கம் அறக்-கட்டளை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஓவியங்-களை வரைந்தனர். சுகாதாரம், சாலை பாதுகாப்பு, குழந்தை பாது-காப்பு, மனநலம், இயற்கை வளம் போன்ற தலைப்புகளில் ஓவியம் தீட்டினர்.அத்துடன் மரம் வெட்டுவதன் தீமை, மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது போன்ற செயல்-களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் விழிப்புணர்வு ஓவி-யங்களும் இடம்பெற்றன. மருத்துவமனை டீன் தேவிமீனாள், ஓவியங்களை பார்வையிட்டார். மாணவர்கள் கூறுகையில், 'மருத்துவமனை சுற்றுச்சு வரில் விளம்-பரங்கள் எழுதுவதையும், போஸ்டர், நோட்டீஸ் ஒட்டுவதை அறவே தவிர்க்க, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கலை நயத்துடன் வெளிப்படுத்த ஓவியம் தீட்டுகிறோம்' என்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ