உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடி, மின்னலில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு

இடி, மின்னலில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு

மேட்டூர், மேட்டூர், வீரக்கல்புதுார் டவுன்பஞ்., சாம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று மாணவர்களுக்கு மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இடி, மின்னலில் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், மழை காலத்தில் இடி, மின்னல் ஏற்படும்போது மாணவர்கள், பொதுமக்கள் உயரமான மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. குடை பிடிக்க கூடாது.நீச்சல் குளத்தில் குளிக்க கூடாது. காதுகளை பொத்தி கொண்டு கீழே குத்துகால் போட்டு நிற்க வேண்டும். அப்போது இரு கால்களின் பின்புறமும் ஒன்றை, ஒன்று ஒட்டி கொண்டு இருக்க வேண்டும் என தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை