உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயுத பூஜை எதிரொலி: அரளி விலை கிலோ ரூ.400

ஆயுத பூஜை எதிரொலி: அரளி விலை கிலோ ரூ.400

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஹெக்டேரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை செடியில் இருந்து அரளி மொக்கு பறித்து தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. புரட்டாசி ஆரம்பத்தில் ஒரு கிலோ அரளி, 20 ரூபாய்க்கு விலை சரிந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஓரிரு நாட்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படும் நிலையில் அரளி விலை உயர்ந்துள்ளது.சேலத்தில் கடந்த, 30ல் ஒரு கிலோ சாதா அரளி, 80, மஞ்சள், செவ்வரளி தலா, 160 ரூபாய்க்கு விற்றது. கடந்த, 1ல் சாதா, 100, மஞ்சள், செவ்வரளி தலா, 200; 3, 4ல் சாதா, 160, மஞ்சள், செவ்வரளி தலா, 250; 6ல் சாதா, 200, மஞ்சள், செவ்வரளி தலா, 300; 7ல் சாதா, 240, மஞ்சள், செவ்வரளி தலா, 300 ரூபாய்க்கு விற்றது. நேற்று சாதா, 300 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை