உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரும் 30ல் பேபி ஈமு பார்ம்ஸ் ஜஸ்ட்வின் ஐ.டி., சொத்து ஏலம்

வரும் 30ல் பேபி ஈமு பார்ம்ஸ் ஜஸ்ட்வின் ஐ.டி., சொத்து ஏலம்

சேலம்: வரும், 30ல், பேபி ஈமு பார்ம்ஸ், ஜஸ்ட்வின் ஐ.டி., சொத்து ஏலம் விடப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார் அறிக்கை: சேலம் மாவட்டத்தில் இயங்கிய, பேபி ஈமு பார்ம்ஸ்; ஜஸ்ட்வின் ஐ.டி., டெக்னாலஜிஸ் இண்டியா மற்றும் ஜஸ்ட்வின் ஐ.டி., டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், வரும், 30 காலை, 10:00 மணிக்கு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் விடப்படும்.ஏல நிபந்தனைகள், கலெக்டர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், தாசில்தார் அலுவலக விளம்பர பலகைளில் ஒட்டப்பட்டுள்ளன. ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பம் உள்ளவர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம். நிறுவனத்தின் அசையும் சொத்துகளை, ஏல தேதிக்கு முன், அழகாபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு, டி.எஸ்.பி., அலுவலகத்தில் பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ