உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறைச்சி கடைகளுக்கு தடை

இறைச்சி கடைகளுக்கு தடை

சேலம், சேலம் மாநகராட்சி பகுதிகளில், அக்., 2ல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அக்., 2, காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது. எனவே வியாபாரிகள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த, ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.அன்று மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைத்து, கண்காணிக்கப்படும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை