உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கை தமிழர் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு இலங்கை தமிழர் போராட்டம்

தாரமங்கலம்; தாரமங்கலம், தச்சங்காட்டூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில், 240 வீடுகளில் மக்கள் வசிக்-கின்றனர். அதில், 50க்கும் மேற்பட்டோர் அங்-குள்ள நுாலகம் அருகே பந்தல் அமைத்து, நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு-பட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:இங்கு சாக்கடை கால்வாய் இல்லாததால் கழி-வுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், குழந்தை கள், முதியோருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குடிநீரும் முறை-யாக வராததால் சிரமத்துக்கு ஆளாகிறோம். 'போர்வெல்' அமைத்து கொடுக்க கேட்டும் நடவ-டிக்கை இல்லை. மயானமும் இல்லாததால், இறந்தவர்கள் உடலை, இடங்கணசாலை மின் மயானத்துக்கு எடுத்துச்சென்று எரியூட்டும் நிலை உள்ளது. அடிப்படை வசதி களுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினரஅங்கு வந்த, ஓமலுார் மண்டல துணை தாசில்தார் ஹரி பிரசாத் உள்ளிட்ட வருவாய்த்து-றையினர் வந்து பேச்சு நடத்தினர். அப்போது ஒரு மாதத்தில் சாக்கடை கால்வாய், போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் மதியம், 1:45 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !