உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டல் ஊழியரிடம் நட்பாக பழகி வழிப்பறி

ஓட்டல் ஊழியரிடம் நட்பாக பழகி வழிப்பறி

சேலம், சேலம், அம்மாபேட்டை, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் அபிமன்யு என்பவர் அறிமுகமாக, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த, 6ல், கொண்டலாம்பட்டி, பிள்ளையார் நகர் அருகே அபிமன்யு, அவரது நண்பர்களை, கார்த்திகேயன் சந்தித்தார்.அப்போது கார்த்திகேயனை மிரட்டி அவர் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, அரைஞாண்கொடி, 2,700 ரூபாயை பறித்துச்சென்றனர். அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !