உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுதி பின்புறம் குடிமகன்கள் கும்மாளம்

விடுதி பின்புறம் குடிமகன்கள் கும்மாளம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதி பின்புறம், குறும்பர் தெரு சாலை உள்ளது. அங்கு தினமும் மாலை, 6:00 முதல் இரவு, 11:00 மணி வரை, ஆட்டோ, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை, குரும்பர் தெரு சாலையிலேயே நிறுத்திவிட்டு மது அருந்துகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மாணவியர் விடுதி பின்புறம் தார்ச்சாலையில் அமர்ந்து மது குடிக்கின்றனர். 'போதை'யில், மக்களை தடுத்து நிறுத்தி, பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இரவில் அந்த வழியே செல்லவே பெண்கள் அச்சப்படுவதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !