உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெங்களூரு - தி.புரம் ரயில் செப்டம்பர் வரை நீட்டிப்பு

பெங்களூரு - தி.புரம் ரயில் செப்டம்பர் வரை நீட்டிப்பு

சேலம், பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு வார ரயில், வெள்ளி காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது. இந்த ரயில், தற்போது ஜூன், 6 முதல் செப்., 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, போத்தனுார், பாலக்காடு வழியே இயக்கப்படுகிறது. அதன் மறுமார்க்க ரயில், ஜூன், 8 முதல் செப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஞாயிறு மதியம், 2:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:30க்கு பெங்களூருவை அடைகிறது. இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை