மேலும் செய்திகள்
குடிநீர் தொட்டி கட்ட பூஜை
24-Nov-2024
குடிநீர் தொட்டி கட்ட பூமிபூஜைஆத்துார், டிச. 21-சீலியம்பட்டி ஊராட்சி, ஜெ.ஜெ.நகரில், 60,000 லிட்டர் குடிநீர் தொட்டி கட்ட, ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து, கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலர் ரஞ்சித்குமார், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர் குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Nov-2024