உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிடாரி அம்மன் திருவிழா கோலாகலம்

பிடாரி அம்மன் திருவிழா கோலாகலம்

பனமரத்துப்பட்டி, நவ. 3-பனமரத்துப்பட்டி, குரால்நத்தத்தில் எட்டுப்பட்டி காவல் தெய்வமான பிடாரி அம்மன் கோவில் ஐப்பசி திருவிழா நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிேஷகம் செய்து வெள்ளி கவசம் அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்தனர். மதியம் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின்போது வழக்கம்போல் சாரல் மழை பெய்தது. விவசாயிகள், விளைபொருட்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருமணமான பெண்கள், குழந்தைப்பேறு வேண்டி, பழமையான ஆச்சா மரத்தில் தொட்டில் கட்டினர். பக்தர்கள் அலகு குத்தியும், ஆடு, கோழி பலியிட்டும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.மகாமேரு உற்சவம்தீபாவளி முடிந்து நேற்று முன்தினம் அமாவாசையால், மேட்டூர் அடுத்த கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் தாலுகா ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்ல, சேலம், தர்மபுரியில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். அங்கு நேற்று காலை, 8:00 முதல், 9:00 மணி வரை மகாமேரு(தேரோட்டம்) உற்சவம் நடந்தது. கோவில் வெளி வளாகத்தை சுற்றி வந்த தேரில் இருந்த சுவாமியை, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்ற பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !