உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்குகள் மோதல்: லாரி டிரான்ஸ்போர்ட் மேலாளர் பலி

பைக்குகள் மோதல்: லாரி டிரான்ஸ்போர்ட் மேலாளர் பலி

சேலம், சேலம், கோட்டையை சேர்ந்தவர் ஜபீர், 40. தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, வீட்டை நோக்கி, 'சைன்' பைக்கில், அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரசாமிப்பட்டியை சேர்ந்த வினோத், 30, எதிரே ஓட்டிவந்த, 'யமஹா' பைக்கும், ஜபீர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இருவரும் ஹெல்மெட் அணியாத நிலையில், படுகாயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு ஜபீர் உயிரிழந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை