உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லஞ்ச வழக்கில் சிக்கிய பில் கலெக்டர் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் சிக்கிய பில் கலெக்டர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம், அழகாபுரம் மிட்டாபுதுார், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் ஷாஜூ, 32. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதற்கு வரியை குறைவாக நிர்ணயம் செய்ய, சேலம் மாநகராட்சி, 5வது வார்டில், பில் கலெக்டராக பணிபுரியும் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ராஜா, 45, லஞ்சம் கேட்டுள்ளார். ஷாஜூ, லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். கடந்த, 28ல், ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ஷாஜூ அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் ராஜாவிடம் வழங்கினார். அப்போது போலீசார், கையும் களவுமாக ராஜாவை கைது செய்தனர். இதனால் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ