தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., ஊர்வலம்
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டியில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், பா.ஜ., சார்பில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நேற்று நடந்தது.கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். பா.ஜ., ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், ஈச்சமரம், பழனி ஆண்டவர் கோவில், திருவள்ளுவர் சாலை வழியாக பனமரத்துப்பட்டி சந்தைபேட்டையை சென்றடைந்தது. அங்கு, சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், வீரபாண்டி தொகுதி இணை பொறுப்பாளர் வெங்கடாசலம், மாவட்ட செயலர் கந்தசாமி உள்ளிட்டோர் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி குறித்து பேசினர்.முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலர் தமிழ்நேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.