உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடுகளில் தேசியக்கொடி பா.ஜ., ஆலோசனை

வீடுகளில் தேசியக்கொடி பா.ஜ., ஆலோசனை

வாழப்பாடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழப்பாடியில் உள்ள, பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மூவர்ண கொடி யாத்திரை, வீடுகளில் தேசிய கொடியேற்றுதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.அதில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கி, கொடியேற்றி, 3 நாட்கள் பறக்க விடுதல்; சட்டசபை தொகுதிகளில் தேசியக்கொடி ஏந்தியபடி பேரணி நடத்துதல் தொடர்பாக ஆலோசித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் குணசேகரன், ஏற்காடு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்துார் உள்ளிட்ட சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி