மேலும் செய்திகள்
செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
20 hour(s) ago
சேலம்: கடந்த, 2015ல், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரப்படுத்தல்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில், செவிலியர்கள், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5ம் நாளான நேற்று, போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து கண்களில், கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், சேலம் மாவட்ட த.வெ.க.,வினர் பங்கேற்று, ஆதரவு தெரிவித்தனர்.
20 hour(s) ago