மேலும் செய்திகள்
குழந்தைகளுடன் கர்ப்பிணிப் பெண் தற்கொலை
26-Nov-2024
பெத்தநாயக்கன்பாளையம்: கிணற்றில் இருந்து, 2 பெண் குழந்தைகள், அவரது தாயான கர்ப்பிணியின் உடல்களை மீட்ட போலீ சார், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த நெய்யமலை அக்கரைப்பட்டியை சேர்ந்த, விவசாயி ரவி, 35. இவரது மனைவி மாதம்மாள், 30. இவர்களது மகள்கள் மனோரஞ்சினி, 7, நித்தீஷ்வரி, 3. இந்நிலையில் மாதம்மாள், 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரவி வீடு அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மாதம்மாள், மனோரஞ்சனி, நித்தீஷ்வரி சடலங்கள் கிடப்பதாக, ஏத்தாப்பூர் போலீசார், கருமந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வீரர்கள், 3 பேரின் சடலங்களை மீட்டு, ஏத்தாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மாதம்மாள் தம்பி பழனிவேல் முருகன் புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ரவிக்கும், மாதம்மாளுக்கும், 9 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன் ஏற்பட்ட தகராறில், மாதம்மாள் இரு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு கடந்த, 23ல், ரவி வந்துள்ளார். அன்று மாதம்மாள், குழந்தைகளுடன் மாயமானார். தற்போது கிணற்றில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.மாதம்மாள் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Nov-2024