மேலும் செய்திகள்
மணமான 5 மாதங்களில் இளம்பெண் தற்கொலை
30-Sep-2026
ஆத்துார்: கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனுாரை சேர்ந்த பெரியசாமி மகன் கதிரவன், 26. பொக்லைன் வாகன டிரைவரான இவர், கடந்த, 19ல், 'ஹீரோ' பைக்கில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வளையமாதேவியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, ெஹல்மெட் அணியாமல் வந்துகொண்டிருந்தார்.காந்திபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வந்தபோது, அதன் சுவர் பகுதியில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Sep-2026