உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் ஓட்டிய சிறுவன் பலி

மொபட் ஓட்டிய சிறுவன் பலி

மொபட் ஓட்டிய சிறுவன் பலிவீரபாண்டி, ஜன. 2-சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த நடராஜன் மகன் சசிகுமார், 17. இவர், 17 வயது நண்பருடன், நேற்று காலை, 6:30 மணிக்கு, 'டியோ' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், கல்பாரப்பட்டியில் இருந்து கொம்பாடிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். நாச்சாரம்மன் கோவில் பிரிவு எதிரே, நடந்து சென்ற முதியவர் மீது மொபட் மோதியது. இதில், 3 பேரும் தடுமாறி விழுந்தனர். படுகாயமடைந்த சசிகுமார், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். நண்பர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், முதியவர், சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை