மேலும் செய்திகள்
தி.மு.க.,வினருக்கு தீபாவளி பரிசு வழங்கல்
17-Oct-2025
ஓமலுார், ஆடு மேய்க்க சென்ற சிறுவன், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.ஓமலுார் அருகே முத்தம்பட்டி, கரட்டூர் பகுதியை சேர்ந்த குமார், 50, கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீதர், 18, பிளஸ் 2 முடித்துள்ளார். சற்று திக்கி, திக்கி பேசுபவர். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு ஆடு மேய்க்க சென்று, தொளசம்பட்டி ரயில்வே பாலத்தில் அமர்ந்து கொண்டு கவனித்து வந்துள்ளார். பின், 5:00 மணியளவில் தண்ணீர் குடிக்க, அருகில் உள்ள மானத்தாள் ஏரிக்குள் சென்றவர் நீரில் மூழ்கினார். அன்று இரவு வரை, ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடினர். இருட்டானதால் தேடும் பணியை நிறுத்தினர். நேற்று காலை மீண்டும் துவங்கி, ஸ்ரீதரை சடலமாக மீட்டனர்.
17-Oct-2025