உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை திருட்டு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே வெண்டனுாரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. இவர், ஈரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வீட்டுக்கு வருவார். கார்த்திகேயன் மனைவி பாக்கியம் நேற்று மதியம், 1:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெண்டனுாரில் பால்வாடியில் உள்ள, குழந்தை கவுசிக்கை அழைத்து வர சென்றுள்ளார்.பின் வீட்டுக்கு வந்தபோது, பூட்டியே இருந்துள்ளது. அதனால் வீட்டை திறக்காமல் மாடுகளுக்கு தீவனம் எடுத்து வர சென்று விட்டு, 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 15 பவுன் தங்கநகை திருட்டு போயுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து, கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை