உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புல்லட், பைக் திருட்டு

புல்லட், பைக் திருட்டு

சேலம், சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ், 32. இவரது, 'ராயல் என்பீல்ட்' புல்லட்டை, கடந்த, 22 இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது புல்லட்டை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பிரசாந்த், 30. இவர், சேலம், மெய்யனுார் ஆலமரத்துக்காட்டில், வாடகை வீட்டில் தங்கி, அழகாபுரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிகிறார். பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்திலும், 'டெலிவரி' வேலை செய்கிறார். கடந்த, 19 இரவு, 'பல்சர்' பைக்கை, வீடு முன் நிறுத்தியிருந்த நிலையில், மறுநாள் காலை காணவில்லை. இதுகுறித்து பிரசாந்த் நேற்று அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி