அறங்காவலர் குழு உறுப்பினர் விண்ணப்பிக்க அழைப்பு
சேலம், ஹிந்து சமய அறநிலையத்துறை சேலம் இணை கமிஷனர் சபர்மதி அறிக்கை:சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து, புது அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒரு பதவி தாழ்த்தப்பட்ட பிரிவனருக்கும், ஒரு பதவி பெண் உறுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டு பதவிக்காலம் கொண்ட உறுப்பினர் பதவிக்கு, 25 வயதுக்கு மேற்பட்ட இந்தியராக உள்ள இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை இணை ஆணையர் அலுவலகம், கோவில் அலுவலகம் மற்றும் https://hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி, உரிய முறையில் பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் அட்டை நகல், வருமானம், இருப்பிடம், ஜாதி, மருத்துவ சான்றிதழ்கள், போலீஸ் தரப்பில் இருந்து சான்றிதழ், சொத்து மதிப்புக்கான, வி.ஏ.ஓ., சான்றிதழ்களை இணைத்து வரும் ஆக., 28க்குள், சேலம் நெத்திமேட்டில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.