மேலும் செய்திகள்
கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க அழைப்பு
06-Sep-2024
சேலம்: நடப்பு, 2024 - 25ல், பி.இ., பி.டெக்., பி.டி.எஸ்., எம்.பி.பி.எஸ்., பி.எட்., பி.பார்ம்., நர்சிங், பி.எஸ்சி., வேளாண் உள்ளிட்ட தொழிற்கல்வி படிக்க, கல்லுாரிகளில் முதலாண்டு சேர்ந்துள்ள முன்னாள் படை வீரர்களின் மகன், மகளுக்கு, பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பத்தை, www.ksb.gov.inஎன்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்ப, டில்லியில் உள்ள முப்படை வீரர் வாரியம் தெரிவித்துள்ளது.முன்னாள் படை வீரர்களின் பெண் வாரிசுகளுக்கு ஆண்டுக்கு, 36,000, ஆண் வாரிசுகளுக்கு, 30,000 ரூபாய் வழங்கப்படும். இது நடப்பாண்டில் முதலாண்டு தொழில் கல்வி படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டும் பொருந்தும். பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், வரும் நவ., 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மகன், மகளை நடப்பாண்டு தொழில்கல்வி படிக்க, கல்லுாரியில் சேர்த்துள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், பிரதம மந்திரி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி முழு விபரம் பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
06-Sep-2024