அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் பணி தகுதியான நிறுவனத்துக்கு அழைப்பு
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாவட்டத்தில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்படும் சிறார்களுக்கு உளவியல் ரீதியான பிரச்னைகளை கையாள, சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துனர் பணி, தொகுப்பூதிய அடிப்படையில் வெளிமுகமை நிறுவனங்கள் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது. ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணிக்கு உளவியல் சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் முதுகலை பட்டத்துடன், கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தகுதியுடன், சமூகப்பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கடந்த, 14 அன்று, 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம், 20,000 ரூபாய். தகுதியான வெளி முகமை நிறுவனங்கள், உரிய சான்றுகளுடன், வரும் செப்., 10 மாலை, 5:30 மணிக்குள் விண்ணப்பத்தை, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 415, 4வது தளம், கலெக்டர் அலுவலகம், சேலம்' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரிலும் வழங்கலாம்.