உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டிகள் பலி

சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டிகள் பலி

சத்தியமங்கலம், ஆசனுார் அருகே, மீண்டும் சிறுத்தை அட்ட காசம்- துவங்கியுள்ளதால், பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. ஆசனுார் அருகே உள்ள அரேபாளையம், ஒங்கல்வாடி உள்ளிட்ட கிராமங்களில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, கடந்த சில மாதங்களாக ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இது பற்றி வனத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ஒங்கல்வாடி பகுதியில், 100 நாள் திட்ட பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, புதர் மறைவில் இருந்த சிறுத்தை மாதேவம்மா என்பவரை தாக்க முயற்சித்துள்ளது. உடன் இருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டினர். இதே போல், பங்களா தொட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது சிறுத்தை தாக்கியதில் பிரகாஷ் காயமடைந்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, ஒங்கல்வாடியை சேர்ந்த பசா மணி, சதானந்தம் ஆகியோரது கன்று குட்டிகளை தாக்கியதில் ஒன்று இறந்துள்ளது. மற்றொன்று படுகாயமடைந்துள்ளது. மேலும் இதே பகுதியில் ஜெகதீஷ் என்பவரது கன்று குட்டியை துாக்கி சென்றது.சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி