உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: அண்ணாமலை கேள்வி

வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா: அண்ணாமலை கேள்வி

சென்னை: ''இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 - 2022 முதல், 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்படவில்லையென்றால், பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்? அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ? ஆட்சிக்கு வந்து ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து, அப்பாவி மக்களை மழைவெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, வருடம் ஒரு மாதம், பேரிடர் நிவாரண நிதி என்று திமுகவினர் ஒப்பாரி வைப்பதால், பொதுமக்களுக்கு என்ன பலன்? இத்தனை ஆண்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை எந்தெந்த வழிகளில் செலவிட்டீர்கள், இன்னும் என்னென்ன செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசிடம் கேட்க முதல்வரை எது தடுக்கிறது? மழை வந்த இரண்டாம் நாளே, குத்துமதிப்பாக இத்தனை ஆயிரம் கோடி நிவாரண நிதி வேண்டும் என்று கேட்பது உங்கள் அரசியல் நாடகத்திற்காக தான் என்பதை மக்கள் அறிவார்கள். எல்லாவற்றுக்கும் மேல், தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பார்லிமென்டிற்கு அனுப்பப்பட்ட திமுக எம்.பி.,க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டில்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது. இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பார்லிமென்டில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டுவிட்டீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
பிப் 10, 2025 10:01

இதுக்கெல்லாம் வெள்ளை அறிக்கைன்னு தமிழ்லே பேசுங்க. மத்திய அரசின் நீதி சம்ஹிதா, சமிரக் சிக்ஷா, ஜல்ஜீவன் சொன்பா வாயை மூடிக்கிட்டு கெடங்க. அப்போ வாயில் தமிழ் வராது.


K.n. Dhasarathan
பிப் 09, 2025 17:59

தினம் நூறு பொய்களை அளக்கும் அண்ணாமலை என்ன சொன்னீர்கள் ? மத்திய அரசு நிதியை உங்கள் எம் பி க்கள் கேட்டு பெறவில்லை ? பாராளுமன்றத்தையே முடக்கி போராட்டம் செய்யவில்லையா ? எங்கே போனீர்கள் ?அறிக்கை கேட்கும் நீங்கள் இதுவரை செய்தது என்ன ? வெல்ல நிவாரண நிதி வாங்கி தர முடிந்ததா ? மெட்ரோ வேலைகளுக்கு வாங்கி தர முடியுமா ? எந்த ஒரு பெரிய தொழிற்சாலையும் மத்திய அரசு இங்கு தரவில்லை, நீங்கள் பெற்று தர முடியுமா ? சாதனை செய்தவர்கள்தான் கேள்வி கேட்கணும் ?


M Ramachandran
பிப் 09, 2025 16:55

அவர்களுக்கு பிடித்தது கருப்பு அத்துடன் வேண்டுமானால் சிவப்பு. அல்லது பிரிட்டிஷ் யேகாதிபத்ய யூனியன் ப்ளூ ஜாக்க்கும் பறவையில்லை. வெள்ளை என்றால் மஹாத்ம காந்தி கால வெள்ளை பற்றி தான் நினைய்பு வரும். அது பிடிக்காது.


Kasimani Baskaran
பிப் 09, 2025 16:11

எங்களுக்கு வெள்ளை என்றால் அலர்ஜி ஆகவே கருப்பு சிகப்பு கலரில் கலர் கலராக அறிக்கை விடுவோம்.


பாமரன்
பிப் 09, 2025 16:56

நமக்கு தான் வெள்ளை புடிக்காதே...


A.Gomathinayagam
பிப் 09, 2025 14:16

தேர்தல் வாக்குறுதிகளை எந்த கட்சியும் தங்கள் ஆளும் மாநிலங்களில் நூறு விழுக்காடு நிறைவேற்றியதாக தெரிய வில்லை .அது ஓட்டு வாங்க ஒரு கவர்ச்சிகரமான நிறைவேற்ற முடியாத வாக்குறுதி .இதில் எந்த அரசியல் கட்சியும் விதி வில க்கு இல்லை


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 09, 2025 13:22

தமிழகம் வளர்கிறது.. ஆம் இதுவரையில் உடன் பிறப்புகள் தான் கொத்தடிமைகளாக இருந்தனர் ஆனால் இப்பொழுது தமிழக மக்களையும் சிந்திக்க தெரியாத, முரசொலி அறிவாளிகலாக, ஐந்தாம் வகுப்பு மாணவன் கேட்கும் சிறுபிள்ளை தனமான கேள்வி கேட்பவர்களாக, தமக்குத்தான் லோக்கல் பாலிடிக்ஸ் முதல் இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ் வரை அனைத்தும் தெரியும் என்பது போலவும், மெத்த படித்த அறிவாளிகளும் தமக்கு கீழேதான் என்றும், வாய் கூசாமல் என்ன இப்படி பொய் பேசுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி சிறிதேனும் இல்லாமல்.... மாற்றி வைத்துள்ளனர் இந்த திராவிட மாடல் அரசு....கண்ணுக்கெட்டிய வரையில் இவர்கள் திருந்துவதற்கு வழி இல்லை....!!!


Kumaraguru
பிப் 09, 2025 12:58

முதல்வர் நாங்கள் செய்ததை செய்து விட்டோம் என்கிறார் முட்டு கொடுப்பவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்களா தமிழ் நாடு இப்படி உருப்படாம போறதுக்கு முட்டுகொடுப்பது குவாட்டர் பிரியாணி 200 ரூபாய் இதுமட்டும் போதும்


குமரன்
பிப் 09, 2025 12:52

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கொரட்டை விட்டு தூங்குகிறார் அதனால் மக்கள் சார்பாக அண்ணாமலை கேட்கிறார் வெள்ளை அறிக்கை ஆளுங்கட்சியினர் வெள்ளை அறிக்கை எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்காமல் இருந்தால் சரி


ES
பிப் 09, 2025 12:34

what about promises made 10 years ago? such a loser talk


பாமரன்
பிப் 09, 2025 12:29

இந்த வெள்ளை அறிக்கை நொள்ளை அறிக்கை கேக்குறது இப்போ ஃபேஷனா பூடுச்சு... அவனுவளும் நம்ம கம்பெனி ஆட்சி பற்றி கேட்டா மியாவ் மியாவ்ன்னு தான் இருக்கனும். சரி அதை விடுங்க ஸார்... ஒரு ஜாலிக்காக ஒங்க ரேஞ்சுல ஒரு வெள்ளை அறிக்கை அதாவது ஒங்களுக்கு செலவு பண்ற நண்பர்கள் அவர்கள் கணக்கு காட்டிய வருமான வரி தாக்கல், நீங்க பிப்ரவரி மாதத்துக்குள்ள நடப்போறதா சொன்ன பத்தாயிரம் கொடி கம்பங்கள், நம்ம நாற்பத்தெட்டு நாள் விரதம், செருப்பு போடாமல் இருப்பது, சாட்டை டான்ஸ், வாட்ச் ப்ராப்பர் பில், டீம்கா ஃபைல்ஸ் ஸ்டேட்ஸ் மாதிரி சிம்பிளான அயிட்டங்கள்க்கு ஒரு வெள்ளை அல்லது கலர்ல அறிக்கை குடுத்துட்டு... தோ இந்தா தோ இந்தா அப்பிடின்னு கோதாவுக்கு இழுக்கலாமே...அப்பவாவது யாராவது உங்களை மதிச்சு பதில் சொல்லாமல் போயிடுவாங்களா என்ன...?? யோசிங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை