உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூக்கனேரி உபரிநீர் வெளியேற ரூ.11.07 கோடியில் கால்வாய்

மூக்கனேரி உபரிநீர் வெளியேற ரூ.11.07 கோடியில் கால்வாய்

சேலம், சேலம் மூக்கனேரியிலிருந்து, உபரிநீர் வெளியேற ரூ.11.07 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் உள்ள மூக்கனேரியிலிருந்து, மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறும் போது, மகாலட்சுமி கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதற்கு தீர்வு காணும் வகையில், மூக்கனேரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை, திருமணி முத்தாறு வரை இணைக்கும் வகையில், 1.35 கி.மீ., நீளத்துக்கு ரூ.11.07 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 2.8 மீட்டர் அகலம், 2.2 மீட்டர் உயரம் கொண்ட இக்கால்வாயில், 10 பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.இப்பணிகளை, நேற்று மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !