உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் அணை-மேடில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்ததில், 1.15 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரி சாலையை சேர்ந்த சுரேஷ், 21, அன்னதானப்பட்டி, வேலு தெருவை சேர்ந்த சுந்தரம், 32, என்பதும், கஞ்சாவை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை