ரயிலில் கஞ்சா பறிமுதல்
சேலம்:தன்பாத் - ஆலப்புழா ரயில், சேலம் அருகே நேற்று அதிகாலை வந்தபோது, போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் தனிப்படையினர், சோதனை நடத்தினர். அதில் பொதுப்பெட்டியில் ஒரு சீட்டுக்கு அடியில், 1.5 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திப்ருகர் - கன்னியாகுமரி ரயிலில், 1.4 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சேலம் ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.